மைனா படம்மூலம் பிரபலமான நடிகை அமலாபால் தொடர்ந்து தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடனம் ஆட அமலாபாலை அழைத்து சென்றுள்ளனர். இதற்காக அமலாபாலுக்கு நட்சத்திர ஹோட்டலில் தனியாக ரூம் கொடுத்து தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அமலாபாலை நடனமாட அழைத்துள்ளனர் விழாக்குழுவினர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசியபடி அவருக்கு முழு சம்பளத்தையும் விழாக்குழுவினர் கொடுக்கவில்லையாம். இதனால் விழாக்குழுவினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பேசியபடி முழுத்தொகையை கொடுத்தால் ஆட வருகிறேன் என்று ஆவேசமாய் கத்தியுள்ளார். ஆனால் இதனை விழாக்குழுவினர் மறுத்துள்ளார். அவர்கள் கூறும்போது சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்னையில் தான் அவர் சண்டை போட்டார் என்று கூறியுள்ளனர்.
Sunday, 1 July 2012
வில்லன் வேடத்திற்கு தயாராகும் ஷக்தி!
சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தனது அப்பா பி.வாசு டைரக்ஷ்னில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஷக்தி. தொடர்ந்து சிவா மனசுல் சக்தி, தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருந்தும் அவரால் இன்னும் முழுமையாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை. அதனால் இப்போது வில்லன் வேடங்கள் மீது ஷக்தியின் கவனம் திரும்பியுள்ளது. விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில், வில்லன் வேடம் கிடைத்தால் சவாலாக ஏற்று நடிக்க தயாராகி விட்டதாக சொல்லியுள்ளார்.
காமெடி வில்லன்
காமெடி வில்லன்
Subscribe to:
Posts (Atom)