பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் வெற்றி பெற்ற படம் அவதார்.
பண்டோரா கிரகவாசிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான சண்டையே இப்படத்தின் ஒருவரிக் கதையாகும்.
அந்தரத்தில் பறக்கும் மலைகள், பண்டோரா அதிசய மனிதர்கள், 3டி தொழில் நுட்பம், டிஜிட்டல் தொழில் நுட்பம், காட்சியமைப்பு, ஆர்ட் டைரக்ஷன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என அனைத்து வகையிலும் அவதார் படத்தை பிரமாண்டமாக எடுத்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
இப்படம் உலகமெங்கும் வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் இப்படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை திரைப்படமாக எடுக்க இருக்கிறாராம்.
இவர் ஏற்கனவே டைட்டானிக் படத்தையும் டெர்மினேட்டர் வெர்சஸ் ஏலியன்ஸ் உள்ளிட்ட மெஹா ஹிட் ஹாலிவுட் படங்களை இயக்கியிருக்கிறார்.
இது குறித்து ஜேம்ஸ் கேமரூன் கூறுகையில், அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க இருக்கிறேன். அவதார் 2, அவதார் 3 ஏன் அவதார் 4 கூட எடுக்கலாம்.
இதற்காக தனியே திரைக்கதை எழுதத் தேவையில்லை. அவதார் படத்தின் நிலப்பரப்பு ஒன்றே போதும். அதை வைத்தே இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கலாம். அந்தளவிற்கு அதில் விஷயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
More Gadgets
0 comments:
Post a Comment