கோலிவுட்டில் ஒரு பெரிய நடிகையாக சமந்தா வலம் வருவார் என்று எதிர்பார்த்தால், இப்போது அது நடக்காது போல தெரிகிறது. தேடி வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் தக்க வைத்து கொள்ள முடியாத நடிகையாகிவிட்டார். சமீபத்தில் மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து விலகிய சமந்தா, இப்போது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள ஐ படத்திலிருந்தும் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் 3 மாத காலத்திற்கு சூரிய வெளிச்சத்திலோ, படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் அருகிலோ நிற்க கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்து இருப்பதாலேயே ஐ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமந்தாவுக்கு பதில் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்சனை நடிக்க வைக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாகவும், மேலும் எமியுடன் இன்னொரு நடிகையாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
More Gadgets
0 comments:
Post a Comment