விழாவில் பேசிய டைரக்டர் மிஷ்கின், முகமூடி என்னுடைய கனவு படம். நான் குழந்தையாக இருக்கும்போது எனக்குள் தோன்றிய கதை இது. இப்படத்தில் ஜீவா சூப்பர்மேனாக நடித்துள்ளார். இதற்காக ஹாங்காங்கில் இருந்து பிரத்யேகமாக உடை வரவழைக்கப்பட்டது. அந்த உடையை 2 நிமிடத்துக்கு மேல் யாரும் அணிய முடியாது. கழற்றும்போது, புகை வரும். ஆனால் ஜீவா தொடர்ந்து அந்த உடையை 90 நாட்கள் அணிந்திருந்தான். முதன்முதலாக அவனிடம் இந்த உடையை கொடுக்கும்போது, ``ஜீவா கடுப்பாகி திட்டப்போகிறான், ஜாக்கிரதை என்று என் உதவி டைரக்டர்களிடம் சொன்னேன். ஆனால், அவன் திட்டவில்லை. டைரக்ஷ்ன் செய்வது ரொம்ப ஈஸி, ஆனால் உலகிலேயே ரொம்ப கஷ்டமானது நடிப்பது தான். ஏனென்றால் நானும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். முகமூடி படம் மூலம் ஜீவா என்ற நல்ல தம்பி கிடைத்து இருக்கிறான். இதற்காக ஆர்.பி.சவுத்ரிக்கு எனது நன்றிகள் என்றார்.
More Gadgets
0 comments:
Post a Comment