சமீபத்தில் தனது உதவியாளர் ஒருவர் இறந்ததை கேள்விப்பட்ட பிரபுதேவா, அவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நடன அமைப்பாளராக இருந்து, நடிகராக மாறி, இப்போது டைரக்டராக உயர்ந்து இருக்கும் பிரபுதேவா, தமிழில் போக்கிரி என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பிறகு அவர் இயக்கிய வில்லு, எங்கேயும் காதல் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இந்தியில் அவர் இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானதுடன் வசூலிலும் சாதனை படைத்து இருக்கிறது.
சமீபத்தில் இந்தியில் அவர் இயக்கிய ரவுடி ரத்தோர் படமும் ரூ.100 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. இதனால் ரொம்பவே உற்சாகமாய் இருந்த பிரபுதேவாவுக்கு சமீபத்தில், ஒரு அதிர்ச்சி செய்தி அவரது காதுகளுக்கு எட்டியிருக்கிறது. போக்கிரி படத்தில் தன்னுடைய உதவியாளராக பணியாற்றிய சந்திரசேகர் என்ற சச்சா இறந்துவிட்டார் என்ற செய்தி தான். அவர் இறந்த சமயம் பிரபுதேவா வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரது இறப்புக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதும் தனது வசனகர்தா வி.பிரபாகர் மூலமாக ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை சந்திரசேகர் குடும்பத்திற்கு அளித்து உதவியுள்ளார்.
More Gadgets
0 comments:
Post a Comment