தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுகளை நம்ப வேண்டாம் என்றும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களிலும், தமிழ் தவிர வேறு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்தவரான இவருக்கும் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்றும், அவரை ஓவியா திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் இதனை ஓவியா முழுவதுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் இப்போது தான் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அதற்குள் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அவ்வளவு பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கு எனது சிந்தனையெல்லாம் சினிமா பற்றியது தான். திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
More Gadgets
0 comments:
Post a Comment