விழாவில் பேசிய டைரக்டர் மிஷ்கின், முகமூடி என்னுடைய கனவு படம். நான் குழந்தையாக இருக்கும்போது எனக்குள் தோன்றிய கதை இது. இப்படத்தில் ஜீவா சூப்பர்மேனாக நடித்துள்ளார். இதற்காக ஹாங்காங்கில் இருந்து பிரத்யேகமாக உடை வரவழைக்கப்பட்டது. அந்த உடையை 2 நிமிடத்துக்கு மேல் யாரும் அணிய முடியாது. கழற்றும்போது, புகை வரும். ஆனால் ஜீவா தொடர்ந்து அந்த உடையை 90 நாட்கள் அணிந்திருந்தான். முதன்முதலாக அவனிடம் இந்த உடையை கொடுக்கும்போது, ``ஜீவா கடுப்பாகி திட்டப்போகிறான், ஜாக்கிரதை என்று என் உதவி டைரக்டர்களிடம் சொன்னேன். ஆனால், அவன் திட்டவில்லை. டைரக்ஷ்ன் செய்வது ரொம்ப ஈஸி, ஆனால் உலகிலேயே ரொம்ப கஷ்டமானது நடிப்பது தான். ஏனென்றால் நானும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். முகமூடி படம் மூலம் ஜீவா என்ற நல்ல தம்பி கிடைத்து இருக்கிறான். இதற்காக ஆர்.பி.சவுத்ரிக்கு எனது நன்றிகள் என்றார்.
Saturday, 30 June 2012
முகமூடி படம் மூலம் ஜீவா என்ற தம்பி கிடைத்திருக்கிறான்! மிஷ்கின் பெருமிதம்!! (Trailer attached)
விழாவில் பேசிய டைரக்டர் மிஷ்கின், முகமூடி என்னுடைய கனவு படம். நான் குழந்தையாக இருக்கும்போது எனக்குள் தோன்றிய கதை இது. இப்படத்தில் ஜீவா சூப்பர்மேனாக நடித்துள்ளார். இதற்காக ஹாங்காங்கில் இருந்து பிரத்யேகமாக உடை வரவழைக்கப்பட்டது. அந்த உடையை 2 நிமிடத்துக்கு மேல் யாரும் அணிய முடியாது. கழற்றும்போது, புகை வரும். ஆனால் ஜீவா தொடர்ந்து அந்த உடையை 90 நாட்கள் அணிந்திருந்தான். முதன்முதலாக அவனிடம் இந்த உடையை கொடுக்கும்போது, ``ஜீவா கடுப்பாகி திட்டப்போகிறான், ஜாக்கிரதை என்று என் உதவி டைரக்டர்களிடம் சொன்னேன். ஆனால், அவன் திட்டவில்லை. டைரக்ஷ்ன் செய்வது ரொம்ப ஈஸி, ஆனால் உலகிலேயே ரொம்ப கஷ்டமானது நடிப்பது தான். ஏனென்றால் நானும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். முகமூடி படம் மூலம் ஜீவா என்ற நல்ல தம்பி கிடைத்து இருக்கிறான். இதற்காக ஆர்.பி.சவுத்ரிக்கு எனது நன்றிகள் என்றார்.
ஷங்கர் படத்திலிருந்து சமந்தா விலகல்...!
கோலிவுட்டில் ஒரு பெரிய நடிகையாக சமந்தா வலம் வருவார் என்று எதிர்பார்த்தால், இப்போது அது நடக்காது போல தெரிகிறது. தேடி வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் தக்க வைத்து கொள்ள முடியாத நடிகையாகிவிட்டார். சமீபத்தில் மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து விலகிய சமந்தா, இப்போது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள ஐ படத்திலிருந்தும் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் 3 மாத காலத்திற்கு சூரிய வெளிச்சத்திலோ, படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் அருகிலோ நிற்க கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்து இருப்பதாலேயே ஐ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமந்தாவுக்கு பதில் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்சனை நடிக்க வைக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாகவும், மேலும் எமியுடன் இன்னொரு நடிகையாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஓவியா காதலிக்கவில்லை! - காதல் கிசுகிசு
தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுகளை நம்ப வேண்டாம் என்றும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களிலும், தமிழ் தவிர வேறு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்தவரான இவருக்கும் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்றும், அவரை ஓவியா திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் இதனை ஓவியா முழுவதுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் இப்போது தான் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அதற்குள் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அவ்வளவு பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கு எனது சிந்தனையெல்லாம் சினிமா பற்றியது தான். திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
அவதாரின் அடுத்த பாகங்களை இயக்குகிறார் ஜேம்ஸ் கேமரூன்
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் வெற்றி பெற்ற படம் அவதார்.
பண்டோரா கிரகவாசிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான சண்டையே இப்படத்தின் ஒருவரிக் கதையாகும்.
அந்தரத்தில் பறக்கும் மலைகள், பண்டோரா அதிசய மனிதர்கள், 3டி தொழில் நுட்பம், டிஜிட்டல் தொழில் நுட்பம், காட்சியமைப்பு, ஆர்ட் டைரக்ஷன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என அனைத்து வகையிலும் அவதார் படத்தை பிரமாண்டமாக எடுத்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
இப்படம் உலகமெங்கும் வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் இப்படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை திரைப்படமாக எடுக்க இருக்கிறாராம்.
இவர் ஏற்கனவே டைட்டானிக் படத்தையும் டெர்மினேட்டர் வெர்சஸ் ஏலியன்ஸ் உள்ளிட்ட மெஹா ஹிட் ஹாலிவுட் படங்களை இயக்கியிருக்கிறார்.
இது குறித்து ஜேம்ஸ் கேமரூன் கூறுகையில், அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க இருக்கிறேன். அவதார் 2, அவதார் 3 ஏன் அவதார் 4 கூட எடுக்கலாம்.
இதற்காக தனியே திரைக்கதை எழுதத் தேவையில்லை. அவதார் படத்தின் நிலப்பரப்பு ஒன்றே போதும். அதை வைத்தே இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கலாம். அந்தளவிற்கு அதில் விஷயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
படுக்கை அறைக் காட்சிக்காக அமெரிக்கா செல்லும் வித்யாபாலன்…!!
தி டர்ட்டி பிக்சரில் ஏக கவர்ச்சி காட்டி நிறைய பேர் மனசை ‘அழுக்காக்கிய’ வித்யா பாலன் மீண்டும் ஒரு முறை அதைவிட கவர்ச்சியாக ஒரு படத்தில் தோன்றப் போகிறார்.
படத்தின் பெயர் ‘கஞ்சக்கர்’. பேச்சு வழக்கு இந்தியில் இதற்கு ‘லூசு’ என்று அர்த்தம்!
இந்த லூசு படத்தில் சாதாரண மனைவி வேடத்தில் வரும் வித்யா, சில படுக்கையறைக் காட்சிகளில் படு செக்ஸியாக தோன்ற வேண்டியுள்ளதாம். இந்தக் காட்சிகளில் அவரது தோற்றம் பார்ப்பவர்களை உசுப்பேற்றும் விதமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்புகிறாராம்.
இதற்காக அவர் அமெரிக்காவுக்குப் போய் ஸ்பெஷல் ஸ்கின் ட்ரீட்மெண்ட் எடுக்கப் போகிறாராம். அதன்பிறகுதான் அந்தக் காட்சியில் நடிப்பாராம்!
இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் குப்தா கூறுகையில், “ஆமாம்.. வித்யா பாலன் இதுவரை எந்த நடிகையும் செய்யாத அளவுக்கு கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் தோன்றப் போகிறார். இதற்காகத்தான் அவரை அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு அனுப்பவிருக்கிறோம்,” என்றார்.
அப்படியென்ன புரட்சி வேடம்…?!
Friday, 29 June 2012
ஜெய்க்கு செட்டாகாத அபிநயா - ரிச்சா!
கவுதம்மேனன் தயாரிப்பில், ஜெய் நடித்து வரும் படம், "தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும்! இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடிக்க, முதலில் அபிநயாவிடம் பேசினார். ஆனால், ஜனவரியில் தான் கால்ஷீட் தர முடியும் என, அவர் சொல்லிவிட்டார். இதனால், "மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சாவிடம், கால்ஷீட் பெறப்பட்டபோதும், போட்டோசெஷன் பார்த்தபோது, ஜெய்யைவிட மெச்சூரிட்டியாக தெரிந்திருக்கிறார் ரிச்சா. அதனால், இப்போது, ஜெய்க்கு பொருத்தமான வேறு நடிகையை தேடி வருகின்றனர்.
சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில சீன்களை எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டதாக சொல்லும் ஜெய், "இந்தப் படம், நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்வதால், அவர் இயக்கத்தில் நடிப்பது போலவே உள்ளது என்கிறார்.

விக்ரம் படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள்!
பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் "டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா
இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Thursday, 28 June 2012
பிரபுதேவாவின் உயர்ந்த உள்ளம்...!
சமீபத்தில் தனது உதவியாளர் ஒருவர் இறந்ததை கேள்விப்பட்ட பிரபுதேவா, அவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நடன அமைப்பாளராக இருந்து, நடிகராக மாறி, இப்போது டைரக்டராக உயர்ந்து இருக்கும் பிரபுதேவா, தமிழில் போக்கிரி என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பிறகு அவர் இயக்கிய வில்லு, எங்கேயும் காதல் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இந்தியில் அவர் இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானதுடன் வசூலிலும் சாதனை படைத்து இருக்கிறது.
சமீபத்தில் இந்தியில் அவர் இயக்கிய ரவுடி ரத்தோர் படமும் ரூ.100 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. இதனால் ரொம்பவே உற்சாகமாய் இருந்த பிரபுதேவாவுக்கு சமீபத்தில், ஒரு அதிர்ச்சி செய்தி அவரது காதுகளுக்கு எட்டியிருக்கிறது. போக்கிரி படத்தில் தன்னுடைய உதவியாளராக பணியாற்றிய சந்திரசேகர் என்ற சச்சா இறந்துவிட்டார் என்ற செய்தி தான். அவர் இறந்த சமயம் பிரபுதேவா வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரது இறப்புக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதும் தனது வசனகர்தா வி.பிரபாகர் மூலமாக ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை சந்திரசேகர் குடும்பத்திற்கு அளித்து உதவியுள்ளார்.
அப்பான்னு கூப்பிடு... இல்லையா அப்படியே போயிடு! எஸ்.ஏ.சி. வாய்மொழி உத்தரவு!!
இருந்தாலும் இளையதளபதி விஜய்யின் அப்பாவுக்கு ரொம்பவும் தான் ஆசை! இல்லையா பின்னே... அ.தி.மு.க.,வில் ஜெ-வை எல்லோரும் அம்மான்னு கூப்பிடுற மாதிரி, விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லோரும் தன்னை அப்பான்னு தான் கூப்பிடணும் என்று சமீபத்தில் நடந்த மன்ற கூட்டமொன்றில் வாய்மொழியாக உத்தரவு போட்டாராம் அப்பா எஸ்.ஏ.சி! இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்களில் ஒருவர் மட்டும் உஷாராகி, அம்மான்னு கூப்பிட்டா அது தாயுள்ளத்தை குறிக்கும், அதே தந்தை இல்லாத ஒருத்தரை அப்பான்னு கூப்பிட்டா அதுவேற பல அர்த்தங்களை கூறும்... என்று எடுத்துக்கூறியிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொண்டாரோ எஸ்.ஏ.சி., நான் பேசிகிட்டிருக்கப்பவே எதிர்த்து பேசுறீயா...? என் மன்றத்துக்குள்ள உனக்கென்ன வேலைன்னு கேட்டு அந்த ரசிகர் மன்ற உறுப்பினரை அடிக்காத குறையாக அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றியதுடன் இல்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தும் அனுப்பிவிட்டார்களாம்!
சமீபத்தில் சென்னை வடபழனி ஷோபா கல்யாண மண்டபத்தில் நடந்த அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய அந்த உறுப்பினர், தென் சென்னை மாவட்டத்து விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதால், அங்கிருந்து விலக்கப்பட்ட கையோடு தனக்கு ஆதரவான மேலும் சில விஜய் மன்ற உறுப்பினர்களோடு வேறு நடிகரின் ரசிகர்மன்றம் தேடி வருகிறாராம்!
Wednesday, 27 June 2012
Tuesday, 26 June 2012
Subscribe to:
Posts (Atom)